Perambalur: Aladhur union DMK opens Thanner Pandal
தமிழ்நாடு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில், பொதுமக்கள் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையொட்டி, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கோடைகால தண்ணீர் பந்தல், கொளக்காநத்தம் கடைவீதியில் உள்ள பஸ் ஸடாப்பில் அமைக்கப்பட்டது, அதனை, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய சேர்மனுமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை இன்று காலை திறந்து வைத்தார்.
பின்னர், நீர், மோர், பானகம், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவரும், கிளை செயலாளருமான என்.ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், ஊராட்சித் துணை தலைவர் காமராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.