Perambalur: All arrangements are made for peaceful and transparent counting of votes! Returning Officer and Collector Karpagam information!

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலருமான கலெக்டர் க.கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, அவர் தெரிவித்தாவது:

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப்பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குள் எண்ணும் பணி தொடங்கும்.

இதுவரை 10,122 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. Service Voters தபால் வாக்குகள் 390 பெறப்பட்டுள்ளது. 04.06.2024 அன்று காலை 8.00 மணி வரை மட்டும் பெறப்பட்ட தபால் வாக்குகள் மட்டும் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தபால் வாக்கு எண்ணிக்கையில் மேஜைக்கு 1 எண்ணிக்கை மேற்பார்வையாளர், 2 எண்ணிக்கை உதவியாளர்கள் என 18 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணியில் 6 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு என 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சர்வீஸ் ஓட்டர்ஸ் வாக்குகள் பிரி-கவுன்டிங் எனப்படும் ஸ்கேனிங் செய்வதற்கு 1 கணினிக்கு 1 எண்ணிக்கை மேற்பார்வையாளர், 2 எண்ணிக்கை உதவியாளர்கள் என 6 அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

137- குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், 143- லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு 18 சுற்றுகளும், 144- மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், 145- முசிறி சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும், 146. துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், 147- பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு 24 சுற்றுகளும் எண்ணப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் 1 எண்ணிக்கை மேற்பார்வையாளர், 2 எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் 1 நுண் பார்வையாளர்கள் என 56 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் மொத்தம் 25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் பணியில் 336 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சுற்று வாரியான வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும், அனைவருக்கும் தெரியும் வகையில் பதாகையில் எழுதப்படும். பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுகளும் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 2 இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்தல் பார்வையாளரால் தெரிவு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மீள மறு சரிபார்ப்பு ( ரீ-செக் ) செய்யப்படும்.

வாக்கு எண்ணும் பணியின் போது சட்டம்-ஒழுங்கு பணியினை கண்காணித்திட வட்டாட்சியர் நிலையில் 4 நிர்வாக நடுவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 1,125 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணுகைக்காக வேட்பாளர்களால் 1,200 முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படும். வாக்குகள் எண்ணுகை மையத்திற்கு கைபேசி எடுத்துவர அனுமதி இல்லை. செய்தியாளர்கள் ஊடக மையத்திற்குள் மட்டும் செல்பேசிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாக்கு எண்ணும் மையத்தில் போதிய முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், அமைதியான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

சார் ஆட்சியர் சு.கோகுல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் அருளானந்தம், சிவா மற்றும் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!