தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் அனைத்து அலுவலர்களும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் அரங்கில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது “ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம் சாதி, வகுப்பு, மொழி ஆகியவறறின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்” என்று மாவட்ட ஆட்சியர் வாக்காளர் உறுதி மொழியை வாசிக்க அனைத்து அலுவலர்களும் அவரைத் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் குமரன் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.