பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளியின் சேர்மன் எ.ராம்குமார் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி ஆசிரியை ஸ்வர்ணகீதா மற்றும் ஜாய்சகீலா வரவேற்புரை ஆற்றினர். பள்ளி முதல்வர் எம்.பிருந்தாவன் ஆண்டரிக்கை வாசித்தார்.
விழாவில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.முனுசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுகுமாரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
செயலாளர் ஆர்.சிவக்குமார் துணைத் தலைவர் சி.மோகனசுந்தரம், துணை பொருளாளர் பி.ரவி, பங்குதாரர்கள் சுபசுதாகர், சங்கீதா முத்துக்குமார், ஒருங்கினைப்பாளர் சாரதா செந்தில்குமார், ஹேமா மற்றும் பள்ளி ஆசிரியைகள் கயல்விழி, சுமதி, வனஜா, சாந்தி மற்றும் ஊழியர்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கடந்த பிப்.21 அன்று மாவட்ட அளவில் பள்ளியில் நடைபெற்ற திறனறிவு தேர்வில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ மாணவிகளை டெல்லி யுரோகான் நிர்வாகி சிராஜ்கிர்மானி, தேர்வு செய்து முதல் பரிசு லேப்டாப், 2ஆம் பரிசு டேப்லெட், 9 பேர்களுக்கு 3ஆம் பரிசு ஸ்போர்ட்ஸ் வாட்ச் 45 பேருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் ஆல்மைட்டி பள்ளியின் மாணவ மாணவிகளின் எழில்மிகு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாரணமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் திருவரசு, டாக்டர் தமிழரசி, பெரம்பலூர் ஸ்டேட் வங்கி துணை மேலாளர் சதீஸ், ரேணுகா சில்கஸ் செந்தில், ஊக்குவிப்பு பயிற்சியாளர் வைரமணி, பொதுப்பணித்துறை பெரியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியை ரம்யா நன்றி கூறினார்.