Perambalur: Almighty Vidyalaya Public School 8th Annual Sports Festival! Chairman A. Ramkumar led!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 8 ஆம் ஆண்டு விளையாட்டு விழா தாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. முதல்வர் ஹேமா வரவேற்றார். துணைத் தலைவர் சி.மோகனசுந்தரம் முன்னிலை வகித்தர். தொடக்கமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் ஆர்ச் அருகிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளாகத்தில் ஏற்றி வைத்து நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. போலீஸ் இன்ஷஸ்பெக்டர் ரஞ்சனா மற்றும் திருச்சி மின்வாரிய பொருளாதார கட்டுப்பாட்டாளர் வடிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்காளாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
அப்போது இன்ஸ்பெக்டர் ரஞ்சனா பேசியதாவது: பள்ளி குழந்தைகளாகட்டும், பெற்றோர்களாகட்டும் எல்லோருக்கும் பிரச்சனை உள்ளது. அதைக் கண்டு பின்வாங்காமல் கையாளும் அணுகு முறையில் தான் நம் வாழ்க்கையில் சாதனையாளராக ஆக முடியும். எந்த ஒரு செயலிலும் விதிமுறையை மீறாத பழக்கம் வளர்த்துக் கொண்டு வரும் மனநிலை இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அமைவதோடு நாம் என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதை அடைந்து விடலாம் என பேசினார். பள்ளி துணை முதல்வர்கள் சாரதா செந்தில்குமார், சந்திரோதயம், எம்.ராஜேந்திரன் விளையாட்டு முகவர்கள் பிரபு, ராஜ்குமார் உள்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.