Perambalur: An international businessman DATO S PRAKADEESH KUMAR came to his hometown from London to vote!
பெரம்பலூர்: பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தனது வாக்கு பதவிற்காக, லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்தவர் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார். மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், லண்டன், ஹாங்காங் உள்ளிட்ட 18 நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.
தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் ஆகிய எந்த தேர்தல் நடந்தாலும் தனது சொந்த கிராமமான பூலாம்பாடி வந்து வாக்களிப்பது வழக்கம்.
அதே போல், இன்றும், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக, லண்டனில் இருந்து பூலாம்பாடி வந்தார் டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார். பின்னர், பூலாம்பாடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு, வாக்களிக்காமல் இருக்கும் சிலர் இருக்கும் நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் பன்னாட்டு தொழிலபதிர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சொந்த ஊருக்கு, லண்டனில் இருந்து செலவு செய்து வாக்களித்திருப்பது, பொதுமக்களை வாக்களிக்க உற்படுத்தியது. அதோடு, பொதுமக்கள் தொழிலதிபர் எஸ்.பிரகதீஸ்குமாரை பலரும் பாராட்டினர்.