Perambalur: An old man commits suicide in a family dispute!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் பெரம்பலூரை சேர்ந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாடாலூரில் பயன்பாடுத்தாமல் கிடந்த, ஓட்டு வீட்டில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன முதியவர் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மகன் மாணிக்கம் (65) என்பதும், குடும்பப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.