Perambalur: An unidentified old man died after being hit by an unidentified vehicle!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை – கீழக்கரை காட்டு மாரியம்மன் கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்க தக்க முதியவர் விபத்தில் காயமடைந்தார். சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இறந்தவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.