Perambalur and Ariyalur districts have separate offices for Assistant Director of Urban Development.

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான நகர் ஊரமைப்புத்துறையின் மண்டல அலுவலகம் பெரம்பலூரில் செயல்பட்டுவந்தது.

தமிழக அரசின் உத்திரவின்படி தற்போது மாவட்டந்தோறும் நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கப்பட்டு வருவதால், பெரம்பலூர் மண்டல அலுவலகம் 2-ஆக பிரிக்கப்பட்டு 20-ந்தேதி முதல் நகர் ஊரமைப்புத்துறை மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகமாக செயல்பட்டுவருகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வீட்டுமனை மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதிபெற துறைமங்கலம் மூன்று சாலை அருகே உள்ள பெரியார் தெருவில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இதேபோல அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இனி தங்களது வீட்டுமனை மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதிபெற அரியலூர் மேற்கு அக்ரஹாரம் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனராக க.உமாராணி நியமிக்கப்பட்டுள்ள இவரே, அரியலூர் மாவட்ட உதவி இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!