பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 71 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 122 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்திட 05.02.2016 முதல் 18.02.2016 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதற்கான நேர் முகத்தேர்வு 25.2.2016 அன்று காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நேர்முகத் தேர்விற்கு வரும் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலும்,
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திற்கு பின்புறமுள்ள கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்திலும்,
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணப்பதாரா;களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திற்கு பின்புறமுள்ள் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே, நேர்முகத் தேர்விற்கு வருகைதரும் நபர்கள் தங்களுடைய அசல் ஆவணங்களையும், மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புகை ரசீது மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணையுடன் 25.2.2016 அன்று காலை 8.00 மணிக்கு தங்கள் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகங்களுக்கு தவறாமல் வருகைதந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.