Perambalur Aranarai Village, Rs 25 Lakh Primary Health Centre: MLA inaugurated!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை எம்.எல்.ஏ பிரபாகரன், குத்து விளக்கு ஏற்றி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், ஆணையர் ராதா, கவுன்சிலர் துரை.காமராஜ், சுகாதார துறை உதவி திட்ட மேலாளர் டாக்டர் கலைமணி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், திமுக பிரமுகர்கள் உடையார் டீ ஸ்டால் குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.