Perambalur area public demand: It is a pity to go under the bridge on the highway to Sengunam!
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவுச் சாலை அருகே கடந்த சில வருடங்களுக்கு முன் தொடர் வாகன விபத்துகள் நடந்ததால், ஏராளமான உயிரிழப்புகள் விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் செங்குணம் பிரிவுச் சாலையின் நடுவே வாகனங்கள் செல்லாமல் இருக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டது.
ஆனால், இந்த சாலை தடுக்கப்பட்ட பின்னர் வாகன ஓட்டிகள் செங்குணம் செல்வதாக இருந்தால் 1கிமீ தாண்டியுள்ள தண்ணீர் பந்தல் ரோவர் கல்லூரி வரை சென்று வரும் சூழல் உள்ளது. இந்த சுமையை குறைக்க திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பாலத்தின் கீழ் உள்ள ஏரிக்கு செல்லும் ஓடையில் கடந்த 2018 முதல் இருச்கர வாகனங்கள் சிறிய நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.
நீரோடை சாலையாக மாறியதால் மழைக்காலத்தில் இப்பாலத்தின் கீழ் தண்ணீர் நிற்பதால் பள்ளம் மேடு தெரியாமல் கீழே விழுந்து செல்கின்றனர். இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு தள்ளபடுவதாக கூறுகின்றனர். இதனால் இந்த தரைவழித்தடத்தை முறையான சிமெண்ட் வழி தரைவழிபாலமாக மாற்றியோ அல்லது மேம்பாலம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதோடு, செங்குணம் வழியாக செல்லும், சிறுகுடல், கீழப்புலியூர், கே.புதூர், பென்னாகரம், எழுமூர், வழியாக வேப்பூர், நமையூர், செல்லும் கிராம மக்களும் பயன் அடைவார்கள் என்பதால், விரைந்து மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.