Perambalur – Ariyalur district DMK congratulates to Prime Secretary K.N. Nehru
தி.மு.க. முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விற்கு, முன்னாள் மத்திய அமைசரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராசா எம்.பி. தலைமையில் பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் என்.சிவா எம்.பி.,மாவட்ட கழகச் செயலாளர்கள் குன்னம் சி.இராஜேந்திரன் (பெரம்பலூர்), எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர்), கொள்கை பரப்பு துனைச் செயலாளர் ச.ந.பெருநற்கிள்ளி, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.