Perambalur-Ariyalur district income tax officials request to pay income tax by December 15!
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வருமான வரித்துறை சார்பில் முன் கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருமான வரி அதிகாரிகள் க.சந்திரசேகரன், நா.மாதவன் ஆகியோர் பேசியதாது: நிதியாண்டில் வருமானத்திற்கு வருமான வரியை
முதல் தவணை 15சதவீதம் ஜீன் 15க்குள்ளும் 2வது தவணை 45 சதவீதம் செப்டம்பர் 15க்குள்ளும் 3வது தவணை 75 சதவீதம் டிசம்பர் 15 க்குள்ளும் நான்காவது தவணை 100 சதவீதம் மார்ச் 15 க்குள்ளும் செலுத்த வேண்டும் எனவும், உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவித்து வரியை திரும்பப் பெற விரும்புவோர் அபராதம் மற்றும் தண்டணைகளை எதிர்கொள்ள நேரிடும், எனவே, உரிய நேரத்தில் தவணையை செலுத்தி பின்விளைவுகளை
தவிர்க்குமாறு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பட்டய கணக்காளர் ப்ரதீப் மற்றும் வரிஆலோசகர் முத்துகுமாரசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வரிஆலோசகர்கள் கிருஷ்ணசாமி, தியாகராஜன் மற்றும் தொழில் முனைவோர், வணிகர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். வருமானவரி ஆய்வாளர் ஸ்ரீகோவிந்த் நன்றி கூறினார்.