Perambalur – Ariyalur district youth team meeting stage where Minister Udayanidhi will attend A. Raja MP!
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆக.28 ம் தேதி மாலையில் பெரம்பலூரில் நடைபெறும் பெரம்பலூர் , அரியலூர் மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கப்படவுள்ள பகுதியை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா.எம்.பி., பார்வையிட்டார். மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், எம்.எல்.ஏ பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் உள்ளிடட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.