பெரம்பலூர்: நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 147-பெரம்பலூர் (தனி) தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து, திருச்சி, நவல்பட்டை சேர்ந்த ஜெனநாதன் மகன் வேல்முருகன் (வயது. 78), என்பவர் பெரம்பலூர் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான பேபியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் ஓய்வு பெற்ற சிவில் சர்ஜன். கல்வித் தகுதி எம்.பி.பி.எஸ்.
பின்னர், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் “நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேல்முருகன் என்னும் நான், வாக்களிக்க பணம் கொடுப்பதும், பணம் பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை நன்கு அறிவேன்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களை கவரும் நோக்குடன், வாக்களிக்க தூண்டும் விதமாக நான் எந்த ஒரு வாக்காளருக்கும் பணமோ, பொருட்களோ கொடுக்க மாட்டேன் என்றும், என்னுடன் சார்ந்தவர்களையும் இந்தக் குற்றச் செயலை செய்யும்படி நேரடியாகவோ, மறைமுகமாவோ வற்புறுத்த மாட்டேன் என்றும், இதன் மூலம் உளமார உறுதியளிக்கின்றேன்” என்ற உறுதிமொழியினை ஏற்றார்.