Perambalur: Autumn has begun!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் உள்ள ஆச்சா மரங்கள் கோடையின் வெப்பத்தை சமாளிக்கவும், தண்ணீர் ஆவியாவதை தடுக்கவும், இலைகளை உதிர்த்து விட்டு உயிரோடு மரம் வாழ்வதை படத்தில் காணலாம். கோடை மழை அல்லது ஆடி மாதம் பெய்தால், மீண்டும் இலைகள் துளிர்விடும். அப்போது வனம், பார்க்க கண்கொள்ளா காட்சியாக மரங்கள் பிங், மஞ்சள் கலரில் காடு முழுவதும் இலைகள் ஜொலிக்கும்.