பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் அருகே புதிதாக துவங்கி நடைபெற்று வரும் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் 2ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான ஒலிம்பேடு 2016 எனும் (திறன்அறித்தேர்வு) நடந்தது.
பெரம்பலூர், சிறுவாச்சூர், பாடாலூர், அரணாரை, குரும்பலூர் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்களுடன் கலந்து கொண்டனர்.
பள்ளி சேர்மன் எ.ராம்குமார் தலைமை வகித்தார். டெல்லி யுரோகான் நிர்வாகி சிராஜ்கிர்மானி, பள்ளியின் செயலாளா; ஆர்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக லேப்டாப்பும், இரண்டம் பரிசு டேப்லட்டும், மூன்றாம் பரிசு ஸ்போர்ட்ஸ் வாட்ச் என தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிப்ரவரி28 ஆம் தேதி பள்ளியில் நடைபெறவுள்ள ஆண்டு விழாவில் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
1,350 க்கும் மேல் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர். துணை முதல்வர் சி.மோகனசுந்தரம், பொருளாளா; பி.ரவி, பங்குதாரர்கள் சுபசுதாகர், சங்கீதா, முத்துக்குமார், ஒருங்கினைப்பாளர் சாரதா செந்தில்குமார், ஹேமா மற்றும் பள்ளி ஆசிரியைகள் கயல்விழி, சுமதி, ஜோஸ் சகிலா, வனஜா, ரம்யா, சாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.