Perambalur; Awareness rally on behalf of cyber crime police!
பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் மற்றும் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியை பெரம்பலூர் டி.எஸ்.பி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுமார் 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் ஓடிபி தொடர்பான குற்றங்கள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், டெலிகிராம் டாஸ்க் பிராடு, கிரிப்டோ கரன்சி பிராடு, போலியான ஆப் கடன் செயலிகள், போலி வேலை வாய்ப்பு, வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள், பார்ட் டைம் ஜாப் போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவமீனா, காவலர்கள் சதிஷ்குமார், ரியாஸ் அகமது, முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும்.
சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் கேட்டுக்கொள்ளவும், பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி பாலக்கரையில் தொடங்கி முக்கிய விதிகள் வழியாக நகரில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.