Perambalur: Banned Gutka, Panmasala Seller Arrested! Police action!
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா விற்பனை நடந்து வருவது குறித்த தகவலின் பேரில் , ரோந்து சென்ற போலீசார்
அந்த கிராமத்தில், தினேஷ் ( 29) என்பவர் விற்பனைக்காக தனது மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 14 கிலோ ஹான்ஸ் மற்றும் 1 கிலோ பான்மசாலாவையும் கைப்பற்றி பறிமுதல் செய்ததோடு, அவற்றை மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சென்ற போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் கள்ளச்சாராயம் விற்றல், காய்ச்சுதல், ஊறல் போடுதல் போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவலளிக்கும் நபர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.