Perambalur: Barricade accident on National Highway: Citizens demand construction of flyover with service road on Kalpadi division road! ( Near Aswins Sweets and Snacks outlet with Factory )

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலை அருகே இன்று மாலை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிந்த பேரிகார்டல் கிரசர் பவுடர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ட்டவசமாக எந்தவித உயிர் சேதமோ, அசம்பாவிதமோ ஏற்படவில்லை. இதனால், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் இருந்து அரியலூருக்கு கிரசர் பவுடர் எடுத்த சென்ற டிப்பர் லாரி கல்பாடி பிரிவு சாலை அருகே வந்த போது எதிரே வைத்திருந்த பேரிகார்டால் ஜிக்ஜாக் வளைவின் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. லாரியில் இருந்த எம்.சாண்ட் எனப்படும் கிரசர் பவுடர் சாலையிலேயே கொட்டியது.

இது குறித்து தகவல் அறிந்த ஹைவே பேட்ரோல் போலீஸ் மற்றும் டிராபிக் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு, ஓரம் கட்டியதோடு, கிரசர் பவுரையும் பொக்லைன் எந்திரம் மூலம் மற்றொரு லாரிக்கு நிரப்பி அப்புறப்படுத்தினர். இதனால், போக்குவரத்தில் சற்று சிரமம் ஏற்பட்டது.

கல்பாடி பிரிவு சாலை வழியாக எறையசமுத்திரம், கல்பாடி, பனங்கூர், மருவத்தூர், கொட்டரை, அய்யலூர், உள்ளிட்ட பல கிராமங்களை பெரம்பலூருடன் இணைக்கிறது. இப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கும் அதிக வாகனங்கள் வருவதாலும், அப்பகுதியில் சாலையை இருமடங்காக அகலப்படுத்தி, விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஒரு பகுதியிலாவது மேம்பாலத்துடன் கூடிய சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் நிறுவனங்களில் இருந்து வருபவர்கள் அடிக்கடி எதிர்திசையில் வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர்.

அடிக்கடி கல்பாடி பிரிவு சாலை அருகே விபத்துக்கள் ஏற்படுவதால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் சமிக்கைகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நடந்த விபத்து சம்பவத்தில், அதிர்ஷ்ட்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் விபத்தும் ஏற்படவில்லை. மேலும், டிராபிக் போலீசார் சார்பில் டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மதுபோதையில் இருந்தாகவும் தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!