Perambalur: Bike-bus collision, teenager killed!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுரேஷ்குமார் (23), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளர். இந்நிலையில் ஊருக்கு வந்தவர் நேற்று மாலை சுமார் 3.15 மணி அளவில், துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் இருந்து அவரது வீட்டிற்கு எதிர் திசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற பைக் திடீரென நிறுத்தப்பட்டிருந்ததால் நிலை தடுமாறிய சுரேஷ்குமார் தடுமாறி எதிரே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்து மீது விழுந்தார். பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில், தலைநசங்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ்குமார் பலியானார். அங்கிருந்த உறவினர் கூக்குரலிட்டு அழுதனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.