பெரம்பலூரில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் மக்கள் சிந்தனைப்பேரவை இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா – 2016 பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் ஜனவரி 29 முதல் நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகத்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று தனலெட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது, அதனை தொடர்ந்து சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் பேசினார்:
அதனை தொடர்ந்து கலைமாமணி, முத்தமிழ் பேரறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் சின்ன சின்ன பொய்கள் வாழ்க்கைக்கு சுமையே! சுகமே! எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.