Perambalur Book Fair; Minister Sivasankar inaugurated!


பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 8 வது புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது.

பெரம்பலூர் நகராட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத்திருவிழா தொடக்க விழாவிற்கு கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, எஸ்பி ஷ்யாம்ளாதேவி, எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் “கற்கை நன்றே“ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அயலி என்ற இணைய தொடரில் நடித்துள்ள அபி நட்சத்திராவிற்கு பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பாக “பெண்மையை போற்றுவோம்“ சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இதில் 100 அரங்குகளில் 100க்கு மேற்பட்ட தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புத்தங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 14 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலை கைதிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகம் வழங்க விரும்பும் நபர்கள் புத்தகங்களை வாங்கி பரிசளிக்க ஏதுவாக சிறைத்துறையின் சார்பில் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கியுள்ளன.

விழாவில் நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன்கன் மீனாம்பாள், பிரபா, ராமலிங்கம், மக்கள் பண்பாட்டு மன்ற தலைவர் சரவணன், செயலாளர் அரவிந்தன், நகராட்சி ஆணையர் (பொ) ராதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரநிதிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டிஆர்ஓ அங்கையற்கண்ணி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லலிதா நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!