Perambalur Book Fair ; The day after tomorrow, international businessman DATO S PRAKADEESH KUMAR participates!

பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பெரம்பலூர் நகராட்சிதிடலில் 8வது புத்தகத் திருவிழா கடந்த 25 ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏப்ரல் 4ம் தேதிவைரை நடைபெறும் புத்தகத்திருவிழாவில்100 அரங்குகளில் 10ஆயிரம் தலைப்புகளில் 1லட்சம் புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கவிஞர்கள்மற்றும்சொற்பொழிவாளர்கள் உரை, கலை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா, பொழுதுபோக்கு அம்சங்கள் என பெரம்பலூர் புத்தகத் திருவிழா களைகட்டிவருகிறது.அதுமட்டுமின்றி பொதுமக்கள் அரசின் திட்டங்களை தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு பாடநூல்கழகம், உழவர் நலன் வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாவில் ஏழாம் நாளான 31.03.2023 அன்று ப்ளஸ் மேக்ஸ் குருப் ஆப் கம்பெனி சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பூலாம்பாடியை பூர்வீகம் கொண்ட டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டு அன்றைய நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசுகிறார். மேலும் அன்று எழுத்தாளர் அகர முதல்வன் அவர்கள் “அறம் எனும் பொறுப்பு” எனும் தலைப்பில் கருத்துரை வழங்க உள்ளார்.

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ் அவர்களின் அமுதத்தமிழ் ஆடரங்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.


இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெறும் பெரம்பலூர் புத்தகத்திருவிழாவை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு டத்தோ பிரகதீஸ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் புத்தக வாசிப்பு ஒருமனிதனை மேம்படுத்தும். நல்ல புத்தகங்களை படிக்கும் போது விசாலமான சிந்தனையும்,பிறதுறை அறிவும் ஏற்படும். எனவே, புத்தகவாசிப்பு அவசியமாகிறது.ஒரே அரங்கின் கீழ் அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை நம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!