Perambalur : broke down the door of a house of gold, silver, including the cash payment of 25 thousand robbery
பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து தங்கம் , வெள்ளி உட்பட ரொக்க பணம் 25 ஆயிரம் கொள்ளை
பெரம்பலூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு மாதவி சாலை பாலாஜி நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராஜீ என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் முத்துகுமார் (34), பிளாஸ்டிக் கேரி பேக் கவர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பை விற்பனையாளரான இவர் தனது மனைவியுடன் கடந்த 11ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சிகிச்சை பெற சென்று விட்டார்.
இந்நிலையில் முத்துகுமார் வசித்து வந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த கட்டிட உரிமையாளர் முத்துகுமாருக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டத்தில் முத்துகுமார் வீட்டில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் உட்பட மொத்தம் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய்உதவியுடன் தடயங்களை சேகரித்து, முத்துகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.