பெரம்பலூர்: நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்கானிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குட்ப்பட்ட குன்னம் பேருந்துநிலையம் அருகில் பறக்கும் படை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி அக்பர்ஷெரீப் என்பவரால் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சம் ரொக்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரானிடம் ஒப்படைக்கப்பட்டது.