Perambalur: Burglary at the house of a municipal employee in broad daylight!
பெரம்பலூர் அருகே வடக்குமாதவி ஏரிக்கரை காட்டுக் கொட்டகை பகுதியில் வசிப்பவர் நாரயணசாமி மகன் நல்லுசாமி (45), பெரம்பலூர் நகராட்சியில் தற்காலிக வாட்டர் லைன்மேனாக உள்ளார். மனைவி ஜெயக்கொடி சித்தாள் வேலைக்கு சென்று விட்டார். மூத்த மகன் வசந்த் பெரம்பலூரில் உள்ள தனியார் மளிகை கடையிலும், இளைய மகன் சந்துரு தனியார் ஏஜன்சியிலும் வேலை செய்கின்றனர்.இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் வீட்டை பூட்டி அவரவர் பணிக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் மீண்டும் மதியம் 12:40 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு கிடந்தது. ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் வசந்த்தின் சான்றிதழ்களும் காணவில்லை.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார், கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கிடைத்த தடயங்களை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாதாள சாக்கடைக்கு லஞ்சம் வாங்குபவர்கள், புளு-பிரிண்ட் அப்ரூவலுக்கு லஞ்சம் வாங்குபவர்கள், டிடிசிபிக்கு அப்ரூவல் உள்ளிட்ட நகராட்சி பணிகளுக்கு கமிசன் வாங்குபவர்கள் வீடுகளை எல்லாம் விட்டுவிட்டு, சாதாரண தற்காலிக பணியாளர்கள் வீட்டில் திருடி இருக்கானே …. என திருடனை அப்பகுதி பொதுமக்கள் திட்டி தீர்த்தனர்.