Perambalur: Candidate Parivendar thanks everyone who worked for him in the election!
தேர்தலில் தனக்காக உழைத்த அனைவருக்கும் என்டிஏ வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், தேர்தலில் தனக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
எனக்காக இரவு பகல் பாராமல் உழைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அமமுக, தமாக, ஓபிஎஸ் அணி, பாமக, தமிழர் தேசம் கட்சி, தமமுக, புதிய நீதி கட்சி, தமகமுக, காமராஜர் மக்கள் கட்சி மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி என அனைத்து கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இந்த மக்களவை தேர்தலை ஒருங்கிணைத்து நடத்திய இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஆதரவளித்த பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.