Perambalur: Car-moped accident: A woman who went to buy groceries died tragically!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தேனூர் கிராமம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ரம்யா(29). இவர் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருவதற்காக அவரது டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்ஸெல் மொபட்டில், சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற கார் ஒன்று ரம்யா ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த திடீர் சாலை விபத்தில், தூக்கி வீசப்பட்ட ரம்யா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்திற்கு காரணமான காரை ஓட்டி சென்ற திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த அழகுமலை மகன் கமல்(36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.