Perambalur: Case registered under 7 sections against DMK members who attacked during quarry tender!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் டெண்டர் போட வந்த பாஜகவினரை டெண்டர் போடவிடாமல் தடுத்து கண்முடித்தனமாக தாக்கியோதோடு, அரசு அலுவலகத்தில் புகுந்து தாக்கியதுடன் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டு புவியியல் அலுலகத்தை சூறையாடிக சம்பவத்தில் பெரம்பலூர் மாவட்ட புவியியல் துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர், ரமேஷ், விஜயகாந்த், தர்மா, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
IPC., 147 – 5க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடுதல்…. 148 -சதி திட்டம் தீட்டி தாக்கும் நோக்கத்தில் ஒன்று கூடி வருதல்… 294 -தகாத வார்த்தைகளால் திட்டுதல்…. 323 -கைகளாலும் சிறிய ஆயுதங்களாலும் தாக்குதல்… 506 class 2 – ஆயுதங்களை கொண்டு கொலை முயற்சியில் ஈடுபடுதல்… 3 Class PPDL Act – பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் திமுகவைினரால் தாக்குதலுக்கு உள்ளான பெரம்பலூர் டி.எஸ்பி பழனிச்சாமி, ,நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சுப்பையன் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் சண்முகம், பெரம்பலூர் மாவட்ட உதவி பொறியாளர் இளங்கோவன், பெரம்பலூர் மாவட்ட புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் , அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, முதல் நிலை காவலர் லட்சுமி ஆகியோர் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.