Perambalur: Cauvery water by canal to Ladhapuram Lake; State General Secretary of Tamil Nadu Naidu Federation Rangaraj interview after filing nomination!

பெரம்பலூர் பகுதியின் வறட்சியை போக்கும் விதமாக லாடபுரம் ஏரிக்கு கால்வாய் மூலம் காவேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வருவேன் என பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தமிழக நாயுடு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜ் வேட்பு மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளராக தமிழக நாயுடு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்ருமான கற்பகத்திடம், தனது வேப்பு மனுவை தாக்கல் செய்தார்,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டமாகும், இங்கு விவசாயத்திற்கும், மக்களின் நீர் ஆதாரத்திற்கும், , காவிரி நீரை லாடபுரம் ஏரிக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் , மேலும் கழிவு நீரினால் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைகளை அதிகப்படுத்தி சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பதாகவும்,

மேலும் ரயில் தடம் என்பது இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது அதனை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும், முன்பிருந்த அமைச்சர்கள் மற்ற அனைவரும் பாராளுமன்றத்தில் பேசுவதாக தெரிவித்தனர்.

இதைசாதனை பட்டியலில் வெளியிட்டு பேசுவது சாதனை என்றால் செயலில் செய்வது என்ன என்று தெரியாமல் உள்ளது, ஆகவே இவைகளை முன்னெடுத்து சரி செய்வதற்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் தனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது அமைப்பின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!