பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 2016-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 01.04.2016 அன்று 12 ½ வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 18.02.2016 முதல் 29.02.2016 வரை (ஞாயிறுக்கிழமை தவிர) www.tndge.in , என்ற இணையதளத்தில் பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளிக்குச் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.125- மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50-மொத்தம் ரூ.175- தேர்வுக் கட்டணத்தை தனித் தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம்.
விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ரூ.40-க்கான அஞ்சல் வில்லை சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இத் தேர்விற்கான விரிவான தகவல்களை www.tndge.in , என்ற இணைய தளத்தில் காணலாம்.
ஆன்லைன் விண்ணப்பங்களை தேர்வர்கள் 29.02.2016 அன்று மாலை 5.00 மணி வரை இதற்கான சேவை மையமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதிவு செய்யலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளார்.