Perambalur: Chatramanai Mahasakthi Mariamman, Nalla Chelandiyamman Chariot Festival; A large number of devotees attended.
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில் இன்று காலை மகா சக்தி மாரியம்மன் மற்றும் நல்ல செல்லாண்டியம்மன் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வேலூர், பொம்மனப்பாடி, கீழக்கணவாய், தம்பிரான்பட்டி, சொக்கநாதபுரம், செட்டிக்குளம், குரூர், சிறுவயலூர், மங்கூன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து நகரின் முக்கிய வீதிகளில் இழுத்து வந்தனர்.