Perambalur City Agents Consultative Meeting It happened under the leadership of Prabhakaran!
பெரம்பலூர் நகரத்திற்கு உட்பட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில், நகரச் செயலாளர் எம். பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் வருகிற சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ப. செந்தில்நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.