Perambalur City AMMK figure in the murder, were absconding former municipal leader surrender!

பெரம்பலூரில் கடந்த 2-ம் தேதி நடந்த அமமுக நகர மாணவரணி செயலாளர் பாண்டி (எ) வல்லத்தரசு, விளாமுத்தூர் சாலை அருகே உள்ள காலி மைதானத்தில் நண்பர் சூர்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்தவரை, ஒரு கும்பல் ஒன்று வெட்டி சாய்த்து விட்டு தலைமறைவானது. அதில் வல்லத்தரசு உயிரிழந்தார். சூர்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


சூர்யா கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றாவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். பிரகாஷ், விஜயராஜ், காக்கா கார்த்தி, கஞ்சா ராஜா, ஆகியோர் கரூர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் சரணடைந்தனர். அதனை தொடர்ந்து, சுப்பிரமணியன் மகன் முருகேசன் (வயது 32), ஆட்டோ டிரைவர், 13 வது வார்டு, அழகிரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ் (வயது 31) ஆகியோர் பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று அந்த வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் முன்னாள் நகராட்சித் தலைவர் (அதிமுக) ரமேஷ் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று மாலை பெரம்பலூர் தெற்கு வி.ஏ.ஓ. விடம் சரணடைந்தார். இது குறித்து வி.ஏ.ஓ கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேசின் வாக்குமூலத்திற்கு பின்னரும், போலீசாரின் விசாரணையின் தீவிர புலனாய்விற்கு பின்னரே அமமுக வல்லத்தரசு கொலைக்கான காரணம் தெரிய வரும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!