Perambalur: Class X passing students by their schools can choose employment office registration – collector
பெரம்பலூர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தேர்வு எழுதிய பள்ளிகளிலேயே செய்து கொள்ளலாம் – ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வர வேண்டும்.
18.07.2016 முதல் 01.08.2016 வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவுமூப்பு தேதியாக வழங்கப்படும்.
மேலும் https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.