Perambalur Co-op tex Deepavali special discount sale opening
பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆர்கானிக் காட்டன் சேலைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள்,
சுங்கடி சேலைகள், செட்டிநாடு சேலைகள், காஞ்சிகாட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், நெகமம் காட்டன் சேலைகள், எல்லோருக்கும் பட்டு சேலைகள், கொரா காட்டன் சேலைகள், லினன் ரெடிமேட் சட்டைகள், ஜீன்ஸ் டாப்ஸ், மீரட் போர்வைகள், சுடிதார் மெட்டீரியல்ஸ், சிறுமுகை, அருப்புக்கோட்டை, பரமக்குடி, மணமெடு, வனவாசி, சேலம் பருத்தி சேலைகள், அச்சிட்ட பருத்தி சேலைகள் ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு இரகங்கள், ரெடிமெட் சட்டைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ் மற்றும் மாப்பிள்ளை செட் என ஏராளமாக வரவழைக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடைவீதி பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் இன்று காலை குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவைக்கி வைத்து, அங்கு திபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சேலைகள் மற்றும் துணி வகைகளையும் பார்வையிட்டார்.
தஞ்சாவூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது. கடந்த 2015-16ஆம் ஆண்டின் தஞ்சாவூர் மண்டலத்தின் மொத்த விற்பனை ரூ.23.86 கோடியாகும். இதில் தீபாவளி 2015 விற்பனை மட்டும் ரூ.12.31 கோடியாகும். இந்த ஆண்டிற்கு (2016-17) ரூ.30 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தீபாவளி 2016 பண்டிகைக்கு மட்டும் ரூ.16.50 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் 2016-17ம் ஆண்டிற்கான விற்பனை குறியீடு ரூ.97 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தீபாவளி-2016 பண்டிகைக்கு மட்டும் ரூ.50 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இன்றைய விற்பனை துவக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2015-16ம் ஆண்டில் ரூ.76.80 லட்சம் விற்பனை நடைபெற்றது. இதில் 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் மட்டும் ரூ.40.01 லட்சம் விற்பனை நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் வாங்கும் ஆடைகளுக்கு தமிழக அரசு 30 சதவீத சிறப்பு தள்ளுபடியும் வழங்குகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோருக்கு கோ-ஆப்டெக்ஸ் வட்டியில்லா சுலப கடன் வசதி அளிக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை அனைத்து அரசு அலுவலர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
சமீப காலங்களில் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்திய கனவு நனவு திட்டம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இத்திட்டத்தன் கீழ் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.3000 வரை 9 மாதங்கள் செலுத்தி வந்தால் 10வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்துவதுடன் 10 வது மாத முடிவில் சேமிப்புடன் 58 சதவீத அளவிற்கு கூடுதலாக கைத்தறி மற்றும் பட்டு ரகங்களை வாங்கிகொள்ளலாம்.
இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளா;களை ஊக்குவிக்கும் முகமாக அவா;கள் செலுத்தும் முதல் தவணையில் 25 விழுக்காடு மதிப்பிற்குரிய துணிகளை அறிமுக வெகுமதியாக கோ-ஆப்டெக்ஸ் வழங்குகிறது.
மேலும் கோ-ஆப்டெக்ஸின் புதிய திட்டமாக பாpசுக்கூப்பன் திட்டம் 2013-14ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, அத்திட்டத்தின் கீழ் திருமணம் மற்றும் இதர சுபவைபவங்களுக்கு வாடிக்கையாளா;கள் அவா;தம் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கைத்தறி இரகங்களை பரிசாக வழங்கும் உன்னதமான வாடிக்கையாளர் பரிசு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசு தள்ளுபடியும் வழங்கப்படும்.
மேலும், தற்போது வாடிக்கையாளர்களுக்கு தங்க மழைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ரொக்க விற்பனையில் ரூ.2,000க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் 55 நபர்களுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் 165 நபர்களுக்கு தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் புதிய ஆடைகளை வாங்கி இந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட கேட்டுக் கொண்டார். இப்போது கோ ஆப் டெக்ஸ் ஊழியர்கள் உடனிருந்தனர்.