Perambalur Collector announces ban on public worship in temples

Photo Credit : Perambalur.nic.in
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக் கோயில்களில் வருகின்ற 02.08.2021 முதல் 08.08.2021 வரை நடைபெறவிருக்கும் ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நிகழ்வுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக திருக்கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆகம விதிகளின் படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா நோய்த் தொற்று பரவலின் காரணமாக இந்த நாட்களில் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை, என தெரிவித்துள்ளார்.