Perambalur Collector announces holiday for Tasmac Shops ahead of elections
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, முன்னிட்டு வரும் பிப்.17 காலை 10.00 மணி முதல் பிப.19 நடுஇரவு 12.00 மணி முடியவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்.22. இன்று மதுக்கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது:
பிப்.19 அன்று நடைபெறும் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பெரம்பலூர் (6309) (6311) (6324) (6319) (6325) (6326), எளம்பலூர் (6320), உப்போடை (6323), செங்குணம் (6438), எசனை (6439), சிறுவாச்சூர் (6442) (6443), பூலாம்பாடி (6329), தழுதாழை (6441), குரும்பலூர் (6317), அம்மாபாளையம் (6476) மற்றும் அகரம்சீகூர் (6423) ஆகிய 17 தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனை கடைகள் 17.02.2022 காலை 10.00 மணி முதல் 19.02.2022 நடுஇரவு 12.00 மணி முடியவும், மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.02.2022 அன்று பெரம்பலூர் (6309) (6311) (6324) (6319) (6325) (6326), எளம்பலூர் (6320), உப்போடை (6323), செங்குணம் (6438) மற்றும் பேரளி (6430) ஆகிய 10 அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கு 22.02.2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.