Perambalur Collector calls on charities for corona disease prevention

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தொண்டு நிறுவனங்களுக்கு விடுத்துள அழைப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு, கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாம் அலையினை தடுக்கும் வகையில் அரசுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படலாம் எனவும், அதுகுறித்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி: tnngocoordination@gmail.com தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட இக்குழுக்கள் பாலமாக செயல்படும்.

தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் கீழ்கண்ட இணையத்தில் https://ucc.uhcitp.in/ngoregistration பதிவு செய்து இப்பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கூடுதல், தகவல்களுக்கு மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூகநல அலுவலரை நேரிலோ அல்லது dswoprmblr@ymail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 6380469886. 04328-224122 04328-296209 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!