Perambalur Collector calls on postpartum and lactating mothers to get corona vaccine!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்திட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முன்களப் பணியாளர்கள், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சார்பில் 18 வயது முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததன் அடிப்படையில் செலுத்தப்பட்டு வருகிறது.


அதனைத் தொடர்ந்து, பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பூசி செலுத்திட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 51 பிரசவித்த தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தாய்மார்கள் எந்தவித பக்க விளைவுகள் இன்றி பூரண நலத்துடன் உள்ளனர். எனவே, பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தாமாக முன் வந்து இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!