Perambalur: Collector flies giant balloon for 100 percent voter registration!

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும், / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கவிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அனைவரும் வாக்களிப்போம்!! 100% வாக்களிப்போம்!!! போன்ற வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்ருமான கற்பகம் பறக்கவிட்டார்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பார்வையிடும் வகையில் உயரமாக இந்த ராட்சத பலூன் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து பறக்க விடப்பட்டுள்ளது.

தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!