Perambalur Collector Information ; Short-term training at the Government ITI
அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூரில் தேசிய கல்வி கொள்கையின்படி குறுகிய கால பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக மத்திய அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து இந்நிலையத்தில் பிளம்பர் ஜெனரல் மற்றும் கன்சுயூமர் எனர்ஜி மீட்டர் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி வழங்கிட உள்ளது.
10-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 14- 45 வயதுக்குட்பட்டவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற வாலிபர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மேற்காணும் தகுதி உள்ளவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் சேர விரும்புவோர் இந்நிலைய முதல்வரை 9499055881 என்ற எண்ணிலோ அல்லது gitiperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.