Perambalur Collector Information to Link Aadhaar Details to Get PM Kisan Installment Amount

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் ரூ 2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன் பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் தங்களது வங்கி கணக்கினை நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக மாற்றம் செய்ய வேண்டும்.

ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய தவறிய மற்றும் வங்கி கணக்கினை நேரடி பணபரிமாற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 16-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது. எனவே, விவசாயிகள், ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், விவசாயிகள் தாமாகவே பி.எம்.கிசான் செயலி மூலம் முக அடையாளத்தை பயன்படுத்தி இ-கே.ஒய்.சி செய்து கொள்ளலாம். நேரடி பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக வங்கி கணக்கினை மாற்றுவதற்கு தங்களது வங்கி கணக்கு உள்ள சம்மந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி மேற்கூறிய செயல்முறையை செய்திட அறிவுறுத்தப்படுகிறது. அல்லது இந்தியா போஸ்ட் வங்கிகளை அணுகி அவ்வங்கிகளில் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கூறிய குறைபாடுகளை சரிசெய்து விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டப்பலனை தொடர்ந்து பெற வேண்டும். பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!