Perambalur Collector information to provide certificates for disabled persons receiving maintenance allowance!

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர் (75% மேல்), தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் நடுக்குவாதம் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000- வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வலுவலத்தின் மூலம் உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்றுடன், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இவ்வலுவலகத்தில் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதுநாள் வரை மேற்கண்ட சான்றுகள் வழங்காத மாற்றுத்திறனாளி நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் 30.01.2023-க்குள் வழங்கிட வேண்டும். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் 04328 – 225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அறியலாம் என்றும், மேற்கண்ட சான்றுகளை வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000- வழங்க இயலாது என்றும், கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!