Perambalur Collector informs farmers to apply and avail benefits under the Prime Minister’s Crop Insurance Scheme!

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உழவர்களுக்கு தெரிவித்துள்ளதாவது:

பயிர் உற்பத்தி இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களோடு “பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்” தமிழகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யும்போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்புகள் ஏற்படுகிறது. அத்தகைய காலக் கட்டங்களில் விவசாயிகளுக்குஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய செட்டிக்குளம், கொளக்காநத்தம், குரும்பலூர், பெரம்பலூர், வாலிகண்டபுரம் மற்றும் வெங்கலம் பிர்கா அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மரவள்ளி பயிருக்கு கூத்தூர், பசும்பலூர், வாலிகண்டபுரம் மற்றும் வெங்கலம் பிர்காவும், தக்காளி பயிருக்கு கூத்தூர் பிர்காவும் அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் வரும் ஜன.18 தேதிக்குள் பிரிமியம் தொகையாக வெங்காய பயிருக்கு காப்பீடு தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.1,860ம், வரும் மார்ச் 01 தேதிக்குள் மரவள்ளி பயிருக்கு காப்பீடு தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.1,440ம் வரும் பிப்15 தேதிக்குள் தக்காளி பயிருக்கு காப்பீடு தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.764ம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி செய்த மேற்கண்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய அதற்குரிய பீரிமிய தொகை, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் அருகிலுள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகள், தனியார், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி விரைந்து காப்பீடு செய்து பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு உரிய வட்டார தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இயற்கை இடர்பாட்டின் காரணமாக வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்களில் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் விவசாயிக் பயிர் காப்பீடு செய்து பயனடைந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!