Perambalur Collector inspects the location of high level bridge and driver’s rest area on Trichy-Chennai National Highway!

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூர் பகுதியில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதால் உயர்மட்ட மேம்பாலம் அமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, ரூ.25.22 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடத்தை கலெக்டர் இன்று பார்வையிட்டார்.

இப்பாலம் சுமார் 500 மீட்டர் நீளத்தில் அமையவுள்ளது. பாலத்தின் கீழ் காரை பிரிவு சாலை பகுதியிலும், ஆலத்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலும் என 2 இடங்களில் பாலத்தின் அடியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதைகள் அமைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதி பொதுமக்கள் பாலத்தின் அடியில் 4 இடங்களில் பாதைகள் வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

விளம்பரம்:

அப்போது, பொதுமக்கள் கோரிக்கையின்படி சாலை 4 வழிகள் அமைக்க வேண்டும் என்றால் பாலத்தின் நீளத்தை அதிகரிக்க நேரிடும், பாலம் அமைக்க ஆகும் செலவினமும் அதிகரிக்கும். தற்போது தேசிய நெடுஞ்சாலையின் உத்தரவிரவின்படி அனுமதிக்கப்பட்ட திட்டத்தின்படி பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்ட கலெக்டர் கற்பகம், சாலை பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது எனவே, வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் போதிய பாதுகாப்பு அமைப்புடன் பாலத்தின் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்றும், போதிய துாரத்திற்கு உரிய அகலத்துடன் கூடிய அணுகுசாலைகள் அமைத்திட வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் உள்ள பெருமாள் கோவில் மலை அடிவாரம் அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வாகன ஓட்டிகள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டதோடு, வாகன ஓட்டிகள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும்,

சிறிய அளவில் பூங்கா ஒன்று அமைத்திட வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் ஆவின் சார்பில் ஆவின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனையகம், தேநீர் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆவின் பொதுமேலாளருக்கு உத்தரவிட்டார். அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!