Perambalur Collector Karpakam order: Cleanliness work in Chettikulam Dhandayuthapani temple complex was done this morning!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்கதர்கள் வருகை தருகின்றனர்.
கோயில் வளாகம் மற்றும் சுற்றுப் பிரகார சுவர் பகுதிகளில் பக்தர்களால் தூக்கி வீசப்படும் காலி வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள், மீதமான உணவுகள் என பல குப்பைகளை விட்டு செல்கின்றனர்.
இதில் இருக்கும் பொருட்களை தண்ணீரை அருந்த குரங்குகள் உள்ளிட்ட விலங்கினங்கள் குப்பை கிளரி சாப்பிடுகின்றன. மேலும், குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் அசவுகரியம் ஏற்பட்டது.
இதை அறிந்த பெரம்பலூர் கலெக்டர் கற்பகம், கோயில் வளாகத்தை தூய்மையாக வைக்க கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சிக்கு உத்திரவிட்டதன் பேரில் இன்று காலை செட்டிக்குளம் கோயில் வளாகம் முழுவதும் தூய்மை படுத்தும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டு தூய்மைபடுத்தினர்.
கலெக்டர் உத்தரவால் முருகன் கோவில் சுற்றுப்பிரபாரம் மற்றும் மலையின் சுற்றுச்சூழல் சீர் தடுப்பட்டுள்ளது.