Perambalur Collector ordered to take action against doctors for late arrival at the hospital!

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் கற்பகம் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, நேரில் சென்ற மாவட்ட கலெக்டர் பராமரிக்கப்பட்டு வரும் வருகை பதிவேட்டை பார்வையிட்டு தாமதமாக வரும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாகவும், சுவையாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் எனவும், உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும், உணவு வழங்கும் பாத்திரங்களை சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக கவனித்துக் கொள்கிறார்களா என்றும், வேறேதும் குறைகள் உள்ளதா என்றும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் குடிநீர் வசதி போதுமான அளவு இருக்கின்றதா என்பது குறித்தும் கழிவறை தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, வேலூர் ஊராட்சிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, இணை இயக்குநர்(மருத்துவ பணிகள்) கண்ணகி, மருத்துவமனை கண்காணிப்பாளர் கலா, நகராட்சி ஆணையாளர் ராமர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (க.ப) கவிதா, பொறியாளர் தனவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!